என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆதார் மையம்"
- நீண்ட வரிசையில் காத்திருந்தனர்
- அரசு விடுமுறை நாட்களை தவிர சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்பட்டு வருகிறது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதியிலும், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்திலும் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆதார் மையத்தில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்து செல்கிறார்கள்.
இதனால் ஆதார் மையத்தில் தினமும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. காலை 9 மணி முதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு அந்த நபர்களுக்கு மட்டும் ஆதார் திருத்தம், பெயர் சேர்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆதார் சேவை மையமானது அரசு விடுமுறை நாட்களை தவிர சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்திற்கு ஏரளாமான பொதுமக்கள் குவித்தனர்.
சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆதார் பெயர் மற்றம், முகவரி திருத்தம் உள்ளிட்ட வைகளை திருத்தம் செய்து சென்றனர். மேலும் ஆதார் திருத்தம் செய்வதற்கு பள்ளி மாணவ-மாணவிகளும் ஏராளமானோர் குவிந்திருந்தனர். ஆதார் திருத்தம் செய்வதற்கு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்ததால் அவதியடைந்தனர்.
- ஆலங்குளத்திற்கு அதனை சுற்றி அமைந்துள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.
- அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆதார் மையத்தை திறந்துள்ளனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்திற்கு அதனை சுற்றி அமைந்துள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.
குறிப்பாக ஆதார் கார்டு திருத்தம், வருமானச்சான்று, சாதிச்சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள், ரேசன் கார்டு, பட்டா விண்ணப்பித்தல் உள்ளிட்டவற்றுக்கும் ஆலங்குளம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள தாலுகா அலுவலகத்திற்கு தான் மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
இந்த அலுவலகத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து விதமான சான்றிதழ்கள் விண்ணப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அந்த வளாகத்தில் ஆதார் மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய ஊழியர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியிடமாற்றம் செய்யப்பட்டதால் ஒரு மாதமாக அந்த மையம் பூட்டியே கிடந்தது. இதனால் பொதுமக்கள் அங்கு வந்து ஏமாந்து திரும்பி சென்றனர்.
இதுதொடர்பாக கடந்த 22-ந்தேதி மாலைமலரில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆதார் மையத்தை திறந்துள்ளனர். இதுதொடர்பாக அந்த மையத்தின் முன்பு ஒரு நோட்டீசையும் ஒட்டி உள்ளனர்.
அதில், நிரந்தர பணியாளர் வரும் வரைக்கும் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் ஆதார் மையம் தற்காலிக பணியாளர்களை கொண்டு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக பூட்டிக்கிடந்த நிலையில், தற்போது வாரத்தில் 3 நாட்கள் ஆதார் மையம் செயல்படுவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். விரைவில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காலை 9 மணி முதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு மட்டும் ஆதார் திருத்தம், பெயர் சேர்த்தல் போன்ற பணிகள்
- போதிய இருக்கை வசதிகள் இல்லாத தால் தரையில் அமர வேண்டிய நிலை உள்ளது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதியிலும் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலக வளாகத்திலும் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆதார் மையத்தில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக மாவட்டத் தின் பல்வேறு பகுதி களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்து செல்கிறார்கள்.
இதனால் ஆதார் மையத்தில் தினமும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. காலை 9 மணி முதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு அந்த நபர்களுக்கு மட்டும் ஆதார் திருத்தம், பெயர் சேர்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாமதமாக வரும் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படுவதில்லை. எனவே பொதுமக்கள் டோக்கன் எடுக்க காலை யிலேயே வரவேண்டிய சூழல் உள்ளது.
ஆதார் மையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு போதுமான வசதிகள் இல்லாததால் அவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். வெயிலையும் பொருட்ப டுத்தாமல் வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் ஆதார் மையத்திற்கு வருபவர்களுக்கு போதிய இருக்கை வசதிகள் இல்லாத தால் தரையில் அமர வேண்டிய நிலை உள்ளது.
இன்று காலையிலும் ஆதார் மையத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் ஆதார் மையத்தின் முன் பகுதியில் தரையில் அமர்ந்து ஆதார் எடுக்க காத்திருந்த னர். கைக்குழந்தைகளுடன் வந்த பொதுமக்களும் பரிதவிப்பிற்கு ஆளா னார்கள். பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆதார் மையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கை வசதிகளை ஏற்ப டுத்துவதுடன் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்ய வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த விஷயத்தில் கலெக்டர் ஸ்ரீதர் உடனடி நடவடிக்கையை மேற் கொண்டு ஆதார் மையத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு வசதியாக கலெக்டர் அலுவலகத்தின் ஒரு பகுதியில் இருக்கை வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பது அனை வரின் கோரிக்கையாக உள்ளது.
திருவாடானை தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் மையத்திற்கு புகைப்படம் எடுக்கவும், பெயர், முகவரி திருத்தம் உள்பட பல்வேறு திருத்தங்களை சரி செய்வதற்காக பல தரப்பட்டவர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இங்கு ஆதார் தொடர்பான சேவைகளை பெறுவதற்கு டோக்கன் வழங்கப்படுகிறது.
ஆனால் எப்போது அந்த டோக்கன் வழங்கப்படும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் பொதுமக்கள் அதிகாலையிலேயே டோக்கன் பெறுவதற்கு வந்து காத்திருக்கின்றனர். அதிகபட்சமாக சுமார் 25 முதல் 30 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது. இதனால் குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியவர்கள் என அனைவரும் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து இங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் பொதுமக்களின் கோரிக்கையை யாரும் கண்டுகொள்வதில்லை.
டோக்கன் பெற்றவர்கள் பல நேரங்களில் இணைய தள வசதியில் குறைபாடு, மின்தடை போன்ற பல காரணங்களால் மாலை வரை காத்திருந்து ஆதார் புகைப்படம் எடுக்க முடியாமல் திரும்பிசெல்கின்றனர். தனியார் இ-சேவை மையங்களில் இது போன்ற சேவைகளை பெறமுடிவதில்லை. இதனால் பொதுமக்கள் வேறுவழியின்றி இங்கு வரவேண்டியுள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு வங்கி கணக்கு அவசியம் தேவை என்பதால் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே வங்கி கணக்கு தொடங்க முடிகிறது.
இதற்காக இம்மையத்திற்கு குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் பசியுடன் காத்திருக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது. பல நேரங்களில் முன்னறிவிப்பு இல்லாமல் ஆதார் மையம் பூட்டப்பட்டு இருக்கும். இதுபோன்ற காரணங்களால் பொதுமக்கள் அலைக்கழிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் திருவாடானை ஆதார் மையம் முறையாக செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இங்கு கூடுதல் பணியாளர்கள், கணினி வசதி, காத்திருப்பவர்களுக்கு இருக்கை, நிழற்குடை, குடிநீர், கழிப்பறை, போதிய கட்டிட வசதிகள் போன்றவற்றை செய்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்